Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பில் என்ன நடக்கும்?

Prasanth Karthick
செவ்வாய், 28 ஜனவரி 2025 (17:36 IST)

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 ஆயிரம் இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பால் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற சில நாட்களிலேயே நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். மெக்ஸிகோ, கனடா எல்லைகளில் கெடுபிடிகளை அதிகரித்ததோடு, நாட்டில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை அவர்கள் சொந்த நாடுகளுக்கே அனுப்பும் நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியுள்ளார்.

 

அதன்படி முதலாவதாக லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இருந்து குடிபுகுந்தவர்களை மீண்டும் கொலம்பியா அனுப்பும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை திரும்ப பெற கொலம்பியா சம்மதிக்காத நிலையில் கொலம்பியாவுக்கான வரிகளை அமெரிக்கா அதிகப்படுத்தியது. இதனால் கொலம்பியா இறுதியில் பணிந்து குடியேறிகளை மீண்டும் பெறுவதாக ஒப்புதல் வழங்கியது.

 

அதுபோல இந்தியாவில் இருந்தும் 18 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாகவும், அவர்களை திரும்ப பெற வேண்டும் என்றும் ட்ரம்ப் கேட்டுக் கொண்ட நிலையில் இந்தியாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

இதுகுறித்து பேசிய ட்ரம்ப் “அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு மோடி வரப்போகிறார். இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு உள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்த இந்தியர்களை திரும்ப பெறும் விவகாரத்தில் மோடி சரியானதை செய்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால் பிப்ரவரியில் நடைபெற உள்ள பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments