ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் - குளிர்காலம் ஆகியவற்றுக்கு இடையில் ஆர்ட்டிக்கடல் பகுதியில் இருந்து பழமையான பனிப்பாறைகள் நகர்ந்து வருவது சகஜம்தான். ஆனால் நேற்று முதல் கனடா அருகே 150 அடி உயர பனிப்பாறை ஒன்றுகடலில் மிதந்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து - லேப்ராடோர் என்ற பகுதியில்தன் இந்த 150 அடி உயர ராட்சத பனிப்பாறை நகர்ந்து வருகிறது. இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த இந்த இடம் தற்போது இந்த பனிப்பாறை காரணமாக சுற்றுலா பகுதியாக மாறிவிட்டது.
இந்த பகுதியை நோக்கி ஆயிரக்கணக்கான சுற்றுலா பகுதியினர் குவிந்து நகர்ந்து பிரமாண்டமான பனிப்பாறையை தங்களுடைய கேமிராவில் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
பூமி வெப்பமயமாதால் ஆர்ட்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி இம்மாதிரியான பனிப்பாறைகள் தோன்றுவதாக கூறப்படுகிறது.