Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15.11 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

15.11 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (07:39 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 15.11 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 151,110,317 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,178,549 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 128,984,319பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,044,068 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 589,207 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 25,641,574 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,592,886 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 401,417 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 13,091,714என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,754,984 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 208,313 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 15,373,765என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?