Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...

Advertiesment
முட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...
, வியாழன், 22 பிப்ரவரி 2018 (15:03 IST)
கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்தோனேஷியாவில் கோவா (Gowa) பகுதியை சேர்ந்தவர் அக்மல். இவருக்கு 14 வயது ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர் முட்டை இடுவதாக இவரது பெற்றோர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
மருத்துவர்கள், இது நிச்சயம் சாத்தியம் அல்ல. மனிதனின் உடலில் முட்டை இருபதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறுகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் சிறுவனுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என தெரியாமல் உள்ளனர். 
 
இது குறித்து சிறுவனது தந்தை கூறியதாவது, அக்ம்ல 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறான். இதுவரை 20 முட்டைகள் இட்டுள்ளான். அந்த முட்டையை உடைத்து பார்த்த போது உள்ளே மஞசல் நிறத்தில் இருந்தது. பல முறை நாங்கள் மருத்துமனையில் இதற்காக சிகிச்சைக்கு வந்தோம். ஆனால், பலன் இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பான சிறுவனது எக்ஸ்-ரே ஒன்றும் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் செய்த காரியம் தமிழகத்துக்கும், திராவிடத்துக்கும் பெருத்த அவமானம்; பொன்.ராதாகிருஷ்ணன் வருத்தம்