பிரான்ஸில் சக மாணவனைக் கத்தியால் குத்திய 11 வயதுச் சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
வகுப்பறையில் ஏற்பட்ட தகராறின் இடையே, 12 வயது சக மாணவனை 11 வயது மாணவன் கத்தியால் குத்தினான். இதில் பலத்த காயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் சட்டப்படி, 10 வயது முதல் 13 வயது வரையுள்ள சிறார்கள் மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு, நீதிமன்றங்களில் அவை நிரூபிக்கப்பட்டாலும், அவர்களை சிறைக்கு அனுப்புவதில்லை.
இவ்வாறு கைது செய்த காவல் துறையினர் தெரிவித்தனர்.