ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த தங்க நாணயம் கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கனடா அரசால் கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதற்கு ‘பெரிய பனை ஓலை’ என பெயரிடப்பட்டிருந்தது.
அந்த தங்க நாணயத்தில் ராணி 2 வது எலிசபெத்தின் உருவப்படம் பொறிக்கப் பட்டிருந்தது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அருங்காட்சியகத்தின் ஜன்னலை உடைத்து ஏணி மூலம் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து, தங்க நாணயத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.