அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரது உயரம் வெறும் 27 அங்குலம்தான்.
பிரிட்ஜெட் ஜார்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ஜார்டனுக்கு 20 வயது. பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால், பிராட்டின் உயரம் 38 அங்குலம். உலகிலேயே குள்ளமான உடன்பிறப்புகளும் இவர்கள்தான் என்கிறது கின்னஸ் நிர்வாகம்.