Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக சினிமா- தி ஷேப் ஆஃப் வாட்டர்

Advertiesment
உலக சினிமா-  தி ஷேப் ஆஃப் வாட்டர்
, சனி, 9 ஜூன் 2018 (19:04 IST)
கடந்த 2017ம் ஆண்டு கில்லர்மோ டெல் டோரோ இயக்கத்தில் வெளிவந்து 4 ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்த திரைப்படம் தி ஷேப் ஆஃப் வாட்டர் ( The shape of water)
 
இந்த படத்தின் கதைக்களம் அமெரிக்காவுக்கும்- ரஷ்யாவுக்கும் பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நடக்கிறது.  இப்படத்தின் நாயகி சாலி ஹாக்கின்ஸ் ஆராய்ச்சி ஆய்வகம் ஓன்றில் குப்பை அகற்றும் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரால் வாய் பேச முடியாது. ஆனால், காது கேட்கும். இவர் பணிபுரியும் ஆய்வகத்தில்  வித்தியாசமான பிராணி ஒன்று ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வில் அது அங்கிருக்கும் காவல் அதிகாரியை காயப்படுத்துகிறது. இதனால் அந்த பிராணியை சித்ரவதை செய்கின்றனர்.
 
ஒரு நாள் சாலி ஹாக்கின்ஸ் அந்த பிராணி அடைக்கப்பட்டிருக்கும் ஆய்வகத்தை சுத்தம் செய்ய செல்கிறார். அப்போது அந்த பிராணியை கண்டு ஆச்சரியப்படுகிறாள். பின்னர் அந்த பிராணிக்கு உணவு அளிக்க செல்கிறார். அப்போது அந்த பிராணி அவளிடம் செய்கை மொழியில் பேசுகிறது. இதனையடுத்து, சாலி ஹாக்கின்ஸும் அந்த பிராணிக்கும் இடையே காதல் மலர்கிறது.
 
அந்த வேளையில் ஆராய்ச்சியாளர்கள் பிராணியை கொன்று ஆராய்ச்சி செய்ய திட்டமிடுகிறார்கள். இந்த விஷயம் குறித்து அறிந்த சாலி ஹாக்கின்ஸ் பிராணியை ஆய்வகத்தில் இருந்து காப்பாற்றி தனது வீட்டிற்கு கடத்தி செல்கிறாள். இதனை கண்டுபிடித்த காவல் அதிகாரி  சாலி ஹாக்கின்ஸ் வீட்டிற்கு படையெடுக்கிறார். இவர்களிடம் இருந்து சாலி ஹாக்கின்ஸும், பிராணியும் எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் மீதி கதை.
 
 
இப்படத்தில் அந்த பிராணிக்கும், சாலி ஹாக்கின்ஸுக்கும் இடையேயான காதல் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டிருக்கும். இந்த காட்சிகளுக்கு அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்லாட் மிகவும் அழகாக தனது பின்னனி இசையால் காட்சிகளை மெருகெற்றி இருப்பார். உணர்வுபூர்வமான காட்சிகளை அழகாக வடிவமைத்து அழகாக படமாகியிருப்பார் இயக்குனர் கில்லர்மோ டெல் டோரோ. ஃபேண்டசி கலந்த டிராமா கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலா குறித்த தனுஷின் லேட்டஸ்ட் ட்வீட்!