Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள்

Advertiesment
2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள்
, சனி, 7 ஜனவரி 2017 (11:13 IST)
வடஅமெரிக்காவில் அதிகம் வசூலிக்கும் படங்கள்தான் உலக அளவிலும் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. உலகம் அந்தப் படங்களைத்தான் அதிகம் பார்க்கிறது. 2016 -இல் வடஅமெரிக்காவில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களைப் பார்ப்போம்.


 

10. Doctor Strange

மார்வலின் இந்த சூப்பர் ஹீரோ கதை வடஅமெரிக்காவில் மட்டும் 230.2 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதன் பட்ஜெட்டைவிட(165 மில்லியன் டாலர்கள்) இது மிக அதிகம்.

09. Suicide Squad

வில் ஸ்மித் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்தப் படத்தை டேவிட் அய்யர் இயக்கியிருந்தார். வடமெரிக்காவில் சக்கைப்போடு போட்டது இந்தப் படம். இதன் யுஎஸ் வசூல் மட்டும் 325.1 மில்லியன் டாலர்கள்.

08. Batman v Superman: Dawn of Justice

இந்த சூப்பர்ஹீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும் அமெரிக்கர்களை கவர்ந்த இரண்டு சூப்பர் ஹீரோக்கள்... படம் சுமாராக இருந்தும் 330.3 மில்லியன் டாலர்களை படம் வசூலித்தது.

07. Zootopia

இந்த அனிமேஷன் படம் உலக அளவில் ஹிட்டடித்தது. யுஎஸ்ஸில் மட்டும் இதன் வசூல் 341.2 மில்லியன் டாலர்கள்.

06. Deadpool

சென்ற வருடத்தின் சர்ப்ரைஸ் ஹிட். இதுவும் சூப்பர்ஹீரோ கதைதான். திரைக்கதை மற்றும் இயக்கத்தின் நேர்த்தியால் ரசிகர்களின் மனம் கவர்ந்தது. 363 மில்லியன் டாலர்கள்.

05. The Jungle Book

இந்திய பின்னணியில் அமைந்த பிரபல காமிக்ஸின் அனிமேஷன் வடிவம். இயக்குனர் ஜான் பேவ்ரு இதனை ஒரு சிறப்பான காட்சி அனுபவமாக மாற்றியிருந்தார். இந்தியாவில் இதுவரை கல்லாகட்டியதில் இதுதான் டாப் ஹாலிவுட் படம். யுஎஸ்ஸில் இதன் வசூல் 364 மில்லியன் டாலர்கள்.


webdunia


04. The Secret Life of Pets

சூப்பர்ஹீரோ படங்களுக்கு இணையாக அனிமேஷன் படங்களும் யுஎஸ்ஸில் வசூலிக்கின்றன. இந்த அனிமேஷன் படத்தின் யுஎஸ் வசூல் 368.3 மில்லியன் டாலர்கள்.

03.  Captain America: Civil War

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை வைத்து வெளிவந்த திரைப்படங்களில் இதுவே பெஸ்ட். அதனால் வசூலும்  கணிசம். மொத்தம் 408 மில்லியன் டாலர்களை யுஎஸ்ஸில் கடந்தது.

02. Rogue One: A Star Wars Story

ஸ்டார் வார்ஸ் படங்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. படம் வெளியானால் ஈ மாதிரி மொய்க்கிறது ரசிகர் கூட்டம். இந்தப் படம் யுஎஸ்ஸில் வசூலித்தது 439.7 மில்லியன் டாலர்கள். டிசம்பர் 16 வெளியான இந்தப் படம் இந்த வாரமும் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ளது. அதனால், விரைவில் இந்தப் பட்டியலில் இது முதலிடத்தைப் பிடிக்கும்.

01. Finding Dory

பைன்டிங் நிமோவின் இரண்டாவது பாகமாக வெளியான இந்தப் படம் 486.2 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வசூலை அனிமேஷன் படங்கள் அனாயாசமாக கடக்கின்றன என்பதற்கு 2016 -ஆம் ஆண்டும் ஓர் உதாரணம்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி-2 படப்பிடிப்பு முடிந்தது - ராஜமௌலி தகவல்