காஜல் அகர்வால் திருமணத்தில் சிறிய மாற்றம்!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (18:17 IST)
பிரபல நடிகை காஜல் அகர்வால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது.

 இந்த நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் காஜல் அகர்வால் இதனை உறுதி செய்துள்ளார்.

அதில், கௌதம் கிட்சுலு என்ற தொழிலதிபரை நான் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளேன் என்றும் மும்பையில் உள்ள ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாகவும் இந்த திருமணத்தில் எங்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா நேரத்தில் அதிக கூட்டங்களை கூட்ட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் திரையுலகை தாண்டி தற்போது தான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளதாகவும் தனக்காக வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தான் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வாலுக்கு திருமணம் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலானது.

இந்நிலையில், தற்போது காஜல் அகர்வால் திருமணத்தில் சிறிய மாற்றம் செய்துள்ளார்.

அதில், மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குப் பதிலாக காஜல் அகர்வாலில் வீட்டிலேயே திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிகழ்ச்சியில் காஜல் அகர்வாலின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளதாகட் தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

விஜய் - சங்கீதா விவாகரத்து பிரச்சனைக்கு பின் எடுக்கப்பட்ட சர்வே.. கொஞ்சம் கூட வாக்கு சதவீதம் குறையவே இல்லை?

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கும் முயற்சி தோல்வி.. இன்னொரு நிறுவனம் தட்டி பறித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments