Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ் தாக்கி பிரபல நடிகர் மரணம்!

Advertiesment
கொரோனா வைரஸ் தாக்கி பிரபல நடிகர் மரணம்!
, வெள்ளி, 27 மார்ச் 2020 (12:52 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் (Mark Blum) கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

நடிகர் மார்க் ப்ளம்... க்ரொகடைல் டண்டீ, டெஸ்பேரேலி செக்கிங் சூசன், தி ப்ரெசிடியோ, How He Fell in Love, ஜெஸ்ஸி ஸ்டோன்: இன்னொசென்ட்ஸ் லோஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் மொசார்ட் இன் தி ஜங்கிள்,  ஸ்வீட் சரண்டர், தி ஜங்கிள் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

webdunia

இந்நிலையில் 69 வயதாகும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. இதனால் தீவிர சிகிச்சை எடுத்து வந்த அவர் சிகிக்சை பலனின்றி நியூயார்க்கில் உள்ள Presbyterian மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள அவரது மனைவி ஜேனட் ஜரிஷ், "என் கணவர் மார்ச் 25 ஆம் தேதி கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு காலமானார் என்று கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்த ஹாலிவுட் பிரபலங்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐயோ கடவுளே.... இது வெறும் வதந்தியா இருக்கக்கூடாதா..? - நடிகை விசாகா சிங்!