வசூல் மழைப் பெய்யும் தி லயன் கிங் - விரைவில் 100 கோடி கிளப்

புதன், 24 ஜூலை 2019 (11:53 IST)
சமீபகாலமாக ரிலிஸான எந்தப்படமும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஓடாத நிலையில் கடந்த வாரம் ரிலிஸான லயன் கிங் திரைப்படம் ஏகோபித்த வரவேறபைப் பெற்றுள்ளது.

ஹாலிவுட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான தி லயன் கிங் திரைப்படம் இப்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட்ட்டுள்ளது. அட்டகாசமான தொழில்நுட்பத்துடன் 3டி யில் வெளியிருக்கும் இந்தப்படம் உலகம் முழுவதும் ஜூலை 19 ஆம் தேதி வெளியானது.

இந்தியாவில் பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ள இந்தப்படம் அந்தந்த மொழியின் முன்னணி நட்சத்திரங்களைக் குரல் கொடுக்க வைத்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் சிறப்பாக ஓடிவரும் இந்தப்படம் முதல்நாளில் 11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதற்கடுத்த நாளில் 19 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் லயன் கிங் விரைவில் இந்தியாவில் 100 கோடி ரூபாயை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியான அனிமேஷன் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை லயன் கிங் பிடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விஜய்யுடன் போட்டி போடும் போனி கபூர் " சிங்கப்பெண்ணே" பாடல் ஓரங்கட்டப்படுமா?