அடடா… விஷ்வல் Treat… வெளியானது ரசிகர்கள் காத்துக் கிடந்த அவதார் 2 டீசர்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (12:44 IST)
அவதார் 2 படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. இருபத்தி நான்கு கோடி டாலர்  பட்ஜெட்டில் உருவான இந்த படம் 284 கோடி டாலர் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சுமார் 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது ‘Avatar 2: the way of water’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தற்போது அவதார் 2 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க விஷ்வல் ட்ரீட்டாக அமைந்துள்ளன டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள். இந்த டீசர் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

அடுத்த கட்டுரையில்
Show comments