Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்...!!

Advertiesment
கணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்...!!
இன்றை காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைகளுக்கு செல்வதால், குடும்பத்தில் இருவரும் சிரித்து பேசி மகிழ வாய்ப்பு  குறைவு. கணவன்-மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில குணம் அல்லது மனம் ஆகியவற்றில் கவனம்  செலுத்துவது முக்கியம்.
இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது அவசியமான ஒன்றாகும். அது, என்னவாகவும் இருக்கலாம்.
 
ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள  இடத்தில் நம்பிக்கை பலப்படும்.
 
தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்யக் கூடாது. ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுவதால், வாழ்வில் சுவாரஸ்யம் கூடும்.
 
நாம் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான  புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் வைத்தல் பாதுகாப்பானதும் கூட.
 
எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர்  முன்னிலையில் பேசுவது மனக்கசப்பை ஏற்படுத்தும்.
 
பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். ‘நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்’ என்பதைப்  புரியவைப்பது அவசியம்.
 
கணவன் மனைவின் குறைகளையும், மனைவி கனவனின் குறைகளையும் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் இரவு தூங்குவதற்கு சருமத்தை இவ்வாறு செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!