வீட்டிலேயே 'நெய்ல் ஆர்ட்' - எளிய டிப்ஸ்
, வெள்ளி, 19 ஏப்ரல் 2013 (17:24 IST)
'
நெய்ல் ஆர்ட்' எனப்படும் நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது அனைத்து வயது பெண்களிடமும் அதீத வரவேற்பை பெற்றுள்ளது.நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் அந்த நகத்தையும் அழகாக வளர்த்து, சுத்தப்படுத்தி, பிறரை கவரும் விதத்தில் பல்வேறு வகையான அலங்காரங்களை செய்துகொள்வது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக பிரபலமான இந்த 'நெய்ல் ஆர்ட்' முறை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு புதிய ஃபேஷன் நடைமுறைக்கு வரும்போது அதற்கு நாம் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாகத்தான் இருக்கும். ஆனாலும் நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் ஒரு ஃபேஷனை பின்பற்றி அசத்தும்போது நமக்கும் அதை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை வருவது இயல்புதான்.அவ்வகையில், அனைத்து வயது பெண்கள் மத்தியிலும் சக்கைப்போடு போடும் நெய்ல் ஆர்ட்டை குறைந்த செலவில் வீட்டிலேயே செய்துகொள்ள இதோ சில எளிய டிப்ஸ்...
நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது.ஆனாலும் நெய்ல் ஆர்ட்- க்கு மிக நீளமான நகங்கள் சூட் ஆகாது. எனவே, நகங்களை சரியான அளவு வளர்த்து, அவற்றின் ஓரங்களை உங்கள் விருப்பம் போல் ஷேப் செய்துகொள்ளவும்.ஷேப் செய்த நகங்களின் மேல் டிரான்ஸ்பரன்ட் நெய்ல் பாலிஷினை பூசி அது காயும்வரை காத்திருங்கள்.நெய்ல் ஆர்ட் பல வகையான டிசைன்களை உடையது. உங்களது நகங்களை பிறரை கவரும் விதத்தில் அலங்கிரிக்க உங்களுக்கு குறைந்தது 4 நிறங்களில் நெய்ல் பாலிஷ்கள் தேவைப்படலாம்.உங்கள் மனதிற்கு பிடித்த டிசைன்களை தேர்வு செய்யுங்கள். டிசைனை தேர்வு செய்யும்போது இன்னோவேடிவ்வாக யோசியுங்கள். பண்டிகைகள், மலர்கள், கார்டூன் உருவங்கள் என நீங்கள் நெய்ல் ஆர்ட்-க்கு தேர்வு செய்ய தீம்-கள் நிறைய உள்ளன.உதாரணதிற்கு நகங்களில் சுழல் போன்ற டிசைனை வரைய, உங்களுக்கு 3 கலர் நெய்ல் பாலிஷ்கள் தேவைப்படும்.முதலில் ஒரு நிறத்தை வைத்து நகத்தில் சுழலை வரைந்து, மீதமிருக்கும் கலரை, முதலில் வரைந்த சுழலுக்கு உட்புறமாக, அடுக்கடுக்காக வரையலாம். இந்த டிசைன்தான் இப்போதைய டிரன்ட்.உங்களிடம் 2 கலர் நெய்ல் பாலிஷ்கள் மட்டுமிருந்தால், ஒரு கலரை நகங்கள் முழுவதும் பூசி, மற்றொரு கலரை நகங்களின் நுனியில் மட்டும் மெல்லிய இழையாக பூசுங்கள். இந்த டிசைன் சிம்பிளாக இருந்தாலும், அசத்தலாக இருக்கும்.
நகங்களில் டிசைன்களுக்கு பதிலாக கார்ட்டூன் உருவங்கள், நட்சத்திரங்கள், மலர்கள், விலங்குகளில் முகங்கள், பழங்கள், கற்கள் பதித்த அலங்காரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.உங்கள் நகங்களுக்கு கிராபிக் டிசைன்களை போன்ற நெய்ல் ஆர்ட் செய்ய விருப்பப்பட்டால், உங்களுக்கு விருப்பமான நிறங்களை அருகருகே ஊற்றி ஒரு ஸ்பாஞ்சால் அந்த நிறங்களை தொட்டு, நகத்தில் பூசினால், நீங்கள் எதிர்பார்த்த கிராபிக் டிசைன் நெய்ல் ஆர்ட் கிடைக்கும்.இந்த வகை நக அலங்காரங்களுக்கு உங்களுக்கு பல நிறங்களில் நெய்ல் பாலிஷ்கள், வெவ்வேறு அளவிலான பிரஷ்கள் தேவைப்படும்.மெல்லிய பிரஷ்களுக்கு, நீங்கள் உபயோகிக்காத நெய்ல் பாலிஷ் பிரஷ்களின் பிரிஸில் - சை (Bristles) நீளவாட்டில் வெட்டிக்கொள்ளலாம்.நெய்ல் ஆர்ட் போடும் முன்னும், போட்டு முடித்த பின்னும் நகங்களின் மீது டிரான்ஸ்பரன்ட் பாலிஷை பூசினால், உங்களின் நக அலங்காரம் நீண்ட நாட்களுக்கு அழகாக அப்படியே இருக்கும்.