நகைகள் அணிய ஆசைப்படாத பெண்களே இல்லை. அதே போல் எந்த நகையை தேர்ந்தெடுத்து அணிவது என்று குழம்பாத பெண்களும் கிடையாது. இது பெண்கள் மிகவும் பிரியப்படுகின்ற பொருள் மட்டுமல்ல; அவசரத்திற்கு உதவுகின்ற ஒரு பொருளாகவும் பயன்படுகிறது. நகைகளை அணியும் பொழுதும், தேர்ந்தெடுக்கும் பொழுதும் கீழ்க்கண்ட விவரங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
1. அதிகமாக நகைகளை அணிய வேண்டாம். திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டும் நகைகளை அதிகமாக அணியவும்.
2. முத்தினால் ஆன ஆபரணங்கள் பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிப்பதுடன் அணிபவரை எடுப்பாகக் காண்பிக்கம். இதனால், அலுவலகத்திற்குச் செல்லும் போதோ, சின்ன சின்ன விருந்துகளில் கலந்து கொள்ளும் பொழுதோ முத்து பதித்த நகைகளை அணியவும்.
3. உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது.
4. இரு வேறு விதமான நகைகளை ( வெள்ளி மற்றும் தங்க நகைகளை ஒன்றாக அணிவது) ஒன்றாய்ச் சேர்த்து எப்பொழுதும் அணிவதைத் தவிர்க்கவும்).
5. நெற்றிச் சட்டி உங்களை அழகாய் காட்டக் கூடிய ஒன்றாகும்.
6. காலை நேரங்களில் நகைகளைக் குறைவாக அணிய வேண்டும். இரவில் அதிகமான நகைகளை அணியலாம்.
7. வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும.
8. நீங்கள் அயல்நாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தால் அதிகமான நகைகளை அணிய வேண்டாம். அவற்றுடன் மெல்லிய செயின், சின்ன சின்ன ஜிமிக்கிகளை அணியலாம்.
9. பாரம்பரிய உடைகளுடன் பாரம்பரிய நகைகளை அணிந்தால் அது உங்களுக்கு வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும். அவற்றுடன் அணியவும்.
10. தற்பொழுது எங்கு பார்த்தாலும், கவரிங் நகை அதிகரித்து விட்டது. இவை மலிவாகக் கிடைப்பதோடு, ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் பெரிதாக எதையும் இழந்து விடவில்லை என்று மனதை தேற்றிக் கொள்ளும் படியாகவும் உள்ளன.
11. நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது. வயதில் சிறியவர்கள் சின்ன நகைகளை அணிவதைக் காட்டிலும், நடுத்தர அளவு நகைகளை அணியலாம்.