கறு கறு கூந்தல் எல்லாம் மலை ஏறி போச்சு!..
, திங்கள், 8 ஏப்ரல் 2013 (12:59 IST)
கறு கறு கூந்தல் எல்லாம் மலை ஏறி போச்சு. அதனால் ஹேர் கலரிங் செய்வது தற்போது தொழிலாகவே மாறிவிட்டது. அதில் நுட்பம், கலைநயம் எல்லாம் கலந்து ஒரு சுவாரஸ்யமான உடல் மேம்பப்பாட்டு கலையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.ஹேர்கலரிங்கில் பல ரகம் உள்ளது. உலகளவில் கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இவை மாறுபடுகிறது. ஹேர் கலரிங்கில் பிரபலமான ஸ்டைலிங் என்றால்ஸ்லைசிங் டெக்னிக், ஹை-லைட்டிங் டெக்னிக், ப்ஃயூஷன் டெக்னிக், வீவிங் டெக்னிக், ஸ்ட்ரீக்கிங், குளோபல் டெக்னிக் போன்றவையாகும்.ஹை-லைட்டிங் டெக்னிக் முறையில் தலைமுடி முழுவதுமோ அல்லது தேவையான பகுதி மட்டுமோ கலர் செய்யப்படுகிறது. இது பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்களை ஈர்க்கும் டெக்நிக்காக உள்ளது.ஸ்லைசிங் டெக்னிக் முறையில் முடியானது 4 அங்குல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சாயம் பூசப்படுகிறது. இது எப்பேர்பட்ட நிறமுடையவர்களின் முகத்திற்கும் பொருத்தமாக இருக்கும். அழகை கூட்டும். வீவிங் டெக்னிக் முறையில் தலைமுடி இடைவெளிவிட்டு சாயம் போடப்படும்.மற்றவர்களை டக்கென கவர விரும்புபவர்கள் இந்த முறையில் கலர் பூசிக் கொள்ளலாம்.ரொமான்டிக் இன்ஸ்பெரேசன் முறையில் தலை முடிக்கு முதலில் அடர்த்தியான நிறமும், பிறகு வெளிர்நிறமும் மீண்டும் அடர்த்தியான நிறமும் பூசப்படுகிறது. இது கவர்ச்சியாக தோன்ற நினைக்கும் பெண்களுக்கு பொருத்தமானதாகும்.தன்னை இளமையாக வெளிப்படுத்த நினைக்கும் பெண்கள் இந்த டெக்னிக்கை பயன்படுத்தலாம்.குளோபல் டெக்னிக் முறை என்பது ஒட்டு மொத்த தலை முடியையே மாற்றிக் கொள்ளும் முறை ஆகும்.தலை முழுவதும் நரைத்தவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி கலர் பூசிக்கொள்ளலாம்.இதில் ஒரே நிறத்தை வெவ்வேறு அடர்த்தியில் 3 அடுக்குகளாகப் பிரித்து பூசிக் கொள்ளலாம். சிவப்பு நிறம் உடையவர்களுக்கு இந்த டெக்னிக் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.நகர்புற பெண்களிடம் இருந்த இந்த கலர் மோகம் தற்போது கிராமத்து பெண்களிடமும் பரவி உள்ளது.காரணம் இளவயதிலேயே பெரும்பாலான பேர் இளநரையில் பாதிக்கப்பட்டிருப்பது தான்.தலை முடிக்கு வண்ணச்சாயம் பூசும் முறை அறிமுகமான பிறகு நரை முடிக்காரர்கள் பலர் இதையே பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.ஹேர் கலர் செய்வதால் வண்ணச் சாயம் வசிகர அழகு கிடைப்பதுடன் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. அழகுணர்ச்சியையும் மேம்படுத்துகிறது. நம்மை நாம் அழுகுப்படுத்திகொள்வதன் மூலமாக நமக்கு ஓர் அசாதாரன மகிழ்ச்சி நமக்கு ஏற்படும், இவை நம்மை உற்சாகமடைய செய்யும்.