Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்களின் அழகுக்கு.....

Advertiesment
கண்களின் அழகுக்கு.....
, சனி, 23 மார்ச் 2013 (17:17 IST)
FILE
இன்றைய தலைமுறையினர் மேக் அப்-பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் விதவிதமான மேக் அப் முறைகளை பயன்படுத்தி அவர்களின் அழகை பன்மடங்கு பொலிவுபடுத்தி கொள்கின்றனர்.

அவ்வகையில், தற்போது மிக பிரபலமாக இருப்பது கண்களுக்கான மேக் அப். இந்த வகை " ஐ" மேக் அப்-பில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், கண்களின் அளவு, வசீகரம் போன்றவற்றை இது தேவைக்கேற்றாற்போல் மாற்றி காண்பிக்கும் தன்மைபடைத்தது.

"ஐ" மேக் அப்- பிற்கு உபயோகப்படுத்தப்படும் எளிய பொருட்கள் ஐ லைனர், ஐ ஷோடோ மற்றும் மஸ்காரா.

ஐ ஷேடோவில் லைட், மீடியம், டார்க் என்ற மூன்று வகை உண்டு. காலை நேரங்களில் லைட்டான கலரிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மீடியம் மற்றும் டார்க் கலரிலும் ஷேடோவை தடவலாம். கறுப்பாக இருப்பவர்கள் கண்களுக்கான மேக்அப்பில் அதிக கவனம் செலுத்தலாம்.

ஐ ஷேடோவில் ப்ளூ, பச்சை கலர்களை தவிர்த்து, பிரவுன், மெரூன், சாக்லெட் ஷேடுகளை உபயோகிக்கலாம்.

அடுத்து ஐ லைனர். ஐ லைனர் திக்காக போடுவதுதான் இப்போது பேஷன். உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருந்தால் கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள்.

கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள். சிறிய கண்களைக் கொண்டவர்கள்..நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.

மஸ்காரா உங்களின் ஐ லாஷை அழகாகவும், அடர்த்தியாகவும் காட்டும். நீளமான ஐ லாஷ்கள் இருந்தாலே அது முகத்திற்கு தனி அழகை தரும்.

இந்த எளிய அழகு பொருட்களையும், குறிப்புகளையும் பயன்படுத்தி உங்கள் கண்களுக்கு மேலும் அழகு சேருங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil