"அதி புத்திசாலியாக இருப்பதைவிட, பெரிய மார்பகங்களையே விரும்பும் இளம் பெண்கள்"
, வியாழன், 7 ஜூன் 2012 (12:13 IST)
18-25
வயது வரையிலான இளம் பெண்கள், தான் அதி புத்திசாலியாக இருப்பதைவிட, பெரிய மார்பகங்களையே கொண்டிருக்க விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், பெரிய மார்பகங்களுக்காக புத்திசாலிதனத்தை துடைத்தெரிய தயாராக இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து பிரபலமாகும் மோகம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.பெரிய மார்பகங்கள் உள்ள பெண்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலோனோர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.பதிலளித்தவர்களில் ஏறக்குறைய 60 சதவீதம் பெண்கள், ஆண்கள் 'அதில்' மிகவும் ஆர்வமாக இருப்பதால், பெரிய மார்பகங்களைப் பெற்றிருப்பதாகவும் கூறினர்.விளம்பரங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக நவீன பெண்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள் பரவலாக கவலையடைய செய்கிறது.தங்கள் உடம்பை கவனிப்பதில் முன்னெப்போது இல்லாத அழுத்தங்களை பெண்கள் சந்திப்பதாக டெய்லி மெயில் என்ற பத்திரிகை கூறியுள்ளது.பெண்கள் அழகாயிருப்பதற்கு தயார்படுத்தும் வணிகச் சந்தைகளின் மதிப்பும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. அதாவது ஆரம்பம் முதலே பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட எப்படி இருக்கிறார்கள் என்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.இதனால்தான் நிறைய உடல் இளைப்பு கூடங்கள், மருத்துவங்கள் பெருகி வருகின்றன. அவர்களது உணவு உட்கொள்ளும் பழக்கமும் கடுமையாக மாறி வருகிறது.உடல் இளைப்பதற்கு கண்ட கண்ட மாத்திரைகளைச் சாப்பிடும் வழக்கத்தினால் சில உயிர் பலிகளும் ஏற்பட்டு வரும் சூழலில், மார்பகக் கவர்ச்சியைக் கூட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள், இன்னும் பல செயற்கை முறைகளைப் பெண்கள் கையாண்டு வருகின்றனர். இந்தியாவிலும் இது போன்ற போக்குகள் அதிகம் தொடங்கியுள்ளன என்று கூறுகிறது இந்த ஆய்வு.