Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்
1. பணிவு:
 
ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விஷயங்களைப் பழகியவுடன், கர்வம் அவர்களூடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப் போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல்படி, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.

2. கருணை:
 
உங்களைச் சுற்றிள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.


 
 
3. பழகும் தன்மை:
 
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களூக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழே உள்ளவர்களிடமும் வெளிபடையாக நடந்து கொள்ளுங்கள். திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.
 
4. அரவணைக்கும் குணம்:
 
உலகில் எல்லாவிதமான மனிதர்களூம் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டு அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு, பழகத் தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.
 
5. இணைந்து பணியாற்றும் குணம்:
 
நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து பணீயாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.
 
6. முடிவெடுக்கும் திறன்:
 
நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம். நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள் நமது வாழ்வின் முக்கிய திருப்புமுனையாக அமையும். இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil