பிளாஸ்டிக் பாட்டில்களில் தோட்டம் அமைக்கலாம்
பிளாஸ்டிக் பாட்டில்களில் தோட்டம் அமைக்கலாம்
பெரிய பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகளை வளர்க்க முயற்சி செய்யுங்கள். இந்த முறைப்படி செய்தால் தினமும் தண்ணீர் ஊற்றவேண்டிய அவசியம் இல்லை.
படத்தில் காட்டியுள்ளபடி பாட்டிலின் கழுத்தருகே மூன்று துளைகள் இட்டு பாட்டிலை சரி பாதியாக கட் செய்துக் கொள்ளுங்கள். மேல் பாகத்தில் இயற்கை உரம், மண் கலந்த கலவையை போட்டு, வாய் பக்கத்தில் இரண்டு துணி/பஞ்சு திரி துண்டுகளை வைத்துவிடுங்கள். செடியை நட்டப் பின் தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலின் கீழ் பாகத்தில் வையுங்கள். அவ்வளவுதான்.
அதிகபடியான நீர் மூன்று துவாரங்களின் வழியாக கீழே வடிந்துவிடும். திரியின் மூலமாக நீர் மேலேரும். இனி விடுமுறையில் நீங்கள் வெளியூர் போனாலும் கவலையில்லை. பாட்டில் தோட்டம் வாடாமல் இருக்கும்.