Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியை உங்கள் வசப்படுத்துவது எப்படி....

Advertiesment
மனைவியை உங்கள் வசப்படுத்துவது எப்படி....
, வியாழன், 26 நவம்பர் 2015 (18:00 IST)
மனைவி வீட்டிற்க்குப்போனாலே சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என்று புலம்பும் ஆண்களுக்கு கொஞ்சம் டிப்ஸ்


 

 
1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு 'உனக்கு பாதுஷா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?'ன்னு ஒரு கேள்வி கேளுங்க. 
 
2. மனைவின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு பரிசுப் பொருள்களை
வாங்கி கொடுத்து அசத்துவது..
 
3. மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.
 
4. புதிய ஆடைகளை அணிந்து வரும்போது வைத்த கண் வாங்காமல் பார்ப்பது. நீ இந்த ட்ரஸ்ல சூப்பரா இருகக என்று பாராட்டு தெரிவிக்கவேண்டும். எப்பவும் முகத்தை கோபமாக வத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து வையுங்கள்.
 
5. விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகை சமைத்து அசத்துங்கள். வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க. 
 
6. சமயலறை சாமான்கள் நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்தூள் போன்ற சாமன்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது!!
 
7. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருநாளாவது ஓட்டல், சினிமா போன்ற பார்க், பீச் என்று அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!
 
8. எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.
 
9. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!
 
10. மீசையை ட்ரிம் பண்ணனும், முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும். 
 
11. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். கூர்ந்து கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து 'இப்ப என்ன சொன்னே'ன்னு அசால்டா கேட்கக்கூடாது.
 
12. பூவுக்கு மயங்காத பெண்கள் இருக்க முடியாது. எனவே பூவை வாங்கி கொடுத்து அசத்துங்க!
 
13. முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? உனக்கு பிடிச்சிருக்கா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.

Share this Story:

Follow Webdunia tamil