Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டில் எத்தனை புலிகள்? அறிக்கை தாக்கல்!

Advertiesment
நாட்டில் எத்தனை புலிகள்? அறிக்கை தாக்கல்!
, வியாழன், 31 ஜனவரி 2008 (20:40 IST)
இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிறுவனம் நாடு முழுவதிலும் மேற்ககொண்ட புலிகள் கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது.

கடந்த ஆண்டில் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்து, புலிகளை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதிலும் புதியதாக எட்டு இடங்களில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.600 கோடியை ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், நாட்டிலுள்ள வனப்பகுதிகள் வாரியாக உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு முடிவுகளை இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிறுவனம் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil