Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எலி விநாயகரின் வாகனமாக இருப்பதற்கான காரணம் என்ன...?

Advertiesment
எலி விநாயகரின் வாகனமாக இருப்பதற்கான காரணம் என்ன...?
விநாயகரின் எலி, கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்தது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர். இந்திரனின் அரச சபையில் வாமதேவ முனிவரின் காலை மிதித்ததால், அதனை ஒரு எலியாக மாற சாபம் அளித்தார்.
இதனை கேட்டு அதிர்ந்த க்ரோன்ச்சர், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது. இருந்தாலும் சாபத்தை திருப்பி பெற இயலாது என கூறினார்  வாமதேவ முனிவர்.
 
எலியாக உருமாறிய க்ரோன்ச்சா, மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது. க்ரோன்ச்சா சாதாரண எலியல்ல. சொல்லப்போனால், மலையளவில் பெரியதாக விளங்கும். அதேபோல் அதனை பார்த்த அனைவரையும் அஞ்ச வைக்கும். மேலும் கண்ணில் பட்ட அனைத்தையும் அழித்து  வந்தது.
webdunia
உலகத்தில் வாழ்ந்த மக்களுக்கு பயங்கரத்தின் மற்றொரு அர்த்தமாக விளங்கியது. இந்நேரத்தில் தான் பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு  விநாயகர் அழைக்கப்பட்டார். அவரை பரஷர் ரிஷியும், அவரின் மனைவியுமான வத்சலாவும் கவனித்துக் கொண்டனர். ராட்ஷச எலியை  பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார். தன் ஆயுதங்களில்  ஒன்றான பாஷாவை (சுருக்கு) எடுத்த விநாயகர், க்ரோன்ச்சா இருக்கும் திசையில் அதனை பறக்கவிட்டார்.
 
அந்த பாஷா மிகவும் பிரகாசமாக இருந்ததால் அதன் வெளிச்சம் இந்த அண்டம் முழுவதும் படர்ந்தது. எலியை துரத்திய பாஷா அதன்  கழுத்தை சுற்றிக் கொண்டது, அதை அப்படியே விநாயகரின் காலடியில் கோண்டு சேர்த்தது. அதன்பின் விநாயகரிடம் மன்னிப்பு கோரிய  க்ரீன்ச்சா, அவரின் வாகனமாக மாறியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (29-08-2019)!