தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - முக்கால் கப்
மிளகு, சீரகம் - தலா ஒன்றரை தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 1 கைப்பிடி
இஞ்சி - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் அல்லது டால்டா - அரை கப்
கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை
பாசிப்பருப்பை மிதமாக வறுத்துக் கொள்ளவும்.
அரிசியையும், வறுத்த பாசிப்பறுப்பையும் தண்ணீர் ஊற்றி கழுவி சிறிது நேரம் நீரில் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியையும், பருப்பையும் போட்டு வேக விடவும்.
வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேக விட்டு இறக்கவும்.
மிளகு, சீரகம், இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து கொள்ளவும்.
இஞ்சியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முந்திரியை ஒடித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் அல்லது டால்டா ஊற்றி மிளகு, சீரகத்தூள், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை முதலியவைகளை தாளித்து பொங்கலில் சேர்க்கவும். நன்கு கிளறி பரிமாவும்.