வடைகறி சைவ உணவுதான்.
தேவையானவை
கடலைப் பருப்பு - 1/4 கிலோ
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 5
நறுக்கிய தக்காளி - 2
கீறிய ப மிளகாய் - 3
எண்ணெய் - அரை லிட்டர்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - சிறிது
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 10 பல்லு
இஞ்சி - சிறு துண்டு
தாளிக்க - கடுகு, சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை
செய்யும் முறை
க பருப்பை இரவில் ஊற வைக்கவும்.
காலையில் கடலைப் பருப்பை 5 பல் பூண்டு, இஞ்சி, சிறிது உப்பு வைத்து கெட்டியாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு அரை வேக்காடாக எடுக்கவும்.
ஆறியதும் கைப் போட்டு உருண்டைகளை உடைத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதை எல்லாம் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம், ப மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, உதிர்த்த கடலை உருண்டைகளையும், தக்காளியையும் போட்டு கிளறவும்.
இறுதியாக சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் சுண்டி தொக்கு பதத்திற்கு வரும்போது இறக்கவும்.