Article Vegetarian Recipes %e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c %e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf 112052800031_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜ இட்லி

Advertiesment
சமையல்
, திங்கள், 28 மே 2012 (16:58 IST)
தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 1 கோப்பை

மிளகு - 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1/2 கோப்பை

புளித்த தயிர் - ஒண்ணரைக் கோப்பை

உளுத்தம் பருப்பு - 1/2 கோப்பை

நெய் - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1/2 கோப்பை

முந்திரிப்பருப்பு - 10

இஞ்சி - 1 அங்குலத்துண்டு

கடுகு - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 10

பெருங்காயம் - 2 சிட்டிகை

கறிவேப்பிலை, கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி

நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். கடைசியில் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதோடு கடைந்த புளித்த தயிர், அரிந்த கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து, மாவில் சேர்க்கவும். நல்லெண்ணெயைச் சூடாக்கி கடுகைச் சேர்த்து பொரிந்ததும், பெருங்காயப் பொடி கலந்து இட்லிமாவில் சேர்க்கவும். பெரிய இட்லி தட்டில் வாழையிலையை வெட்டி உள்ளே வைத்து அதன் மேல் நல்லெண்ணெயைத் தடவி அதில் மாவை ஊற்றவும். குக்கரில் ஆவியில் வேக வைத்து (20 நிமிடங்கள் ) எடுக்கவும். பெரிய துண்டங்களாக வெட்டி சட்னி அல்லது மிளகாய்த் தூளுடன் பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil