Article Vegetarian Recipes %e0%ae%b0%e0%ae%b5%e0%af%88 %e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf 109062600088_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரவை இட்லி

Advertiesment
ரவை இட்லி
, வெள்ளி, 26 ஜூன் 2009 (16:18 IST)
ரவை இட்லியை செய்து பாருங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை:

பாம்பே ரவை - ஒரு கப்
சற்று புளித்த தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - 1 க‌ப்
நறுக்கிய மல்லித்தழை ‌சி‌றிது
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள்.

பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ரவையுட‌ன் சேருங்கள்.

பின்பு மற்ற பொருட்களையும் ரவையுடன் சேர்த்து, தேவையான அள‌வி‌ற்கு தண்ணீரும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil