Article Vegetarian Recipes %e0%ae%aa%e2%80%8c%e0%ae%a9%e0%af%80%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d %e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be 109091000085_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப‌னீ‌ர் மசாலா

Advertiesment
பனீர் மசாலா
, வியாழன், 10 செப்டம்பர் 2009 (15:26 IST)
தேவையானவை

ப‌னீ‌ர் - கா‌ல் ‌கிலோ
வெ‌ங்காய‌ம் - 2
த‌க்கா‌ளி - 4
சோயா சா‌ஸ், இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது - தலா 1 தே‌க்கர‌ண்டி
த‌க்கா‌ளி சா‌ஸ் - 2 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது
அ‌ஜினமோ‌ட்டோ - ‌சி‌றிது
கர‌ம் மசாலா, ம‌ஞ்ச‌ள் பொடி - ஒரு ‌சி‌ட்டிகை
ஏல‌க்கா‌‌ய் - 4
வன‌ஸ்ப‌தி - ஒரு தே‌க்கர‌ண்டி
எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப்
மி‌ளகா‌ய் பொடி - கா‌ல் தே‌க்கர‌ண்டி
கொ‌த்தும‌ல்‌லி - ‌சி‌றிது

செ‌ய்முறை

webdunia photo
WD
வெ‌ங்காய‌த்தை ஏல‌க்கா‌ய் சே‌ர்‌த்து‌ம், த‌க்கா‌ளியை‌த் த‌னியாகவு‌ம் அரை‌க்கவு‌ம்.

ப‌னீரை ‌து‌ண்டுகளாக வெ‌ட்டி எ‌ண்ணெ‌யி‌ல் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக பொ‌றிக்கவு‌ம்.

webdunia
webdunia photo
WD
வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு, இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது, வெ‌ங்காய‌ ‌விழுது, த‌க்கா‌ளி ‌விழுது என ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக சே‌ர்‌த்து ந‌ன்கு வத‌க்கவு‌ம்.

அ‌தி‌ல் ம‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌மிளகா‌ய் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌‌‌த்து ‌கிள‌றி ‌விடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் ப‌னீரை சே‌ர்‌த்து ‌கிள‌றி‌விடவு‌ம்.

ஐ‌ந்து ‌நி‌மிட‌‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு, சோயாசா‌ஸ், கர‌ம்மசாலா, அ‌ஜினமோ‌ட்டோ, த‌க்கா‌ளிசா‌ஸ் சே‌ர்‌த்து ‌கிள‌றி கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி ‌இற‌க்‌கவு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil