ஹோட்டல்களில் இளைஞர்கள் விரும்பி சாப்பிடும் உணவான ப்ரைடு ரைஸ் மிகவும் எளிமையான உணவு முறைதான். அதை வீட்டிலேயே செய்யலாம்.எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை அரிசி - 2 ஆழாக்குகோஸ் - 100 கிராம்கேரட் - 100 கிராம்பீன்ஸ் - 100 கிராம்வெங்காயம் - 2 கொடை மிளகாய் - 1அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகைஎண்ணெய் - தேவையான அளவுபச்சை மிளகாய் - 3மிளகு தூள் - 3இஞ்சி, பூண்டு கொத்துமல்லிசெய்யும் முறைசாதத்தை பாதி வெந்த நிலையில் வடித்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அது பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போக வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கோஸ், கேரட், பீன்ஸ், கொடை மிளகாய் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு, அஜினமோட்டோ, சோயா சாஸ், சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து வதக்கவும்.
இப்போது ஆற வைத்திருக்கும் சாதத்தை அதில் கொட்டி நன்கு கலந்து விட வேண்டும்.
இறக்கும்போது கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
இதற்கு தக்காளி சாஸ் சரியான இணை உணவாக இருக்கும்.
சூடாக பரிமாறுங்கள். பாராட்டைப் பெறுங்கள்.