புதினா இட்லி சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி
அரிசி - ஒரு ஆழாக்கு
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 5
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சோடா மாவு- 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
புதினாவை ஆய்ந்து, அலசி வைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அலசிய புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தயத்தை ஊறவைத்து விடுங்கள்.
இவற்றை அரைக்கும்போது வதக்கிய புதினா, பச்சை மிளகாயையும் அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி அரைத்த மாவை உப்புப் போட்டுக் கலக்கி வைத்து விட்டு பத்து மணிநேரம் கழித்து சோடாமாவு சேர்த்து இட்லி ஊற்றுங்கள்.
புதினா இட்லி தயார்.