Article Vegetarian Recipes %e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88 %e0%ae%b5%e0%ae%9f%e0%af%88 109091800055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவலை வடை

Advertiesment
தவலை வடை
, வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (13:53 IST)
தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி - அரை கப்
க பருப்பு, ப பருப்பு, து பருப்பு, உ பருப்பு - தலா அரை கப்
ஜவ்வரிசி - ஒரு கைப்பிடி
தேங்காய் பல் பல்லாகக் கீறியது - கால் கப்
காய்ந்த மிளகாய் - 6
நறு‌க்‌கிய இஞ்சி, ப. ‌மிளகா‌ய் - 1 தே‌க்கர‌ண்டி
க‌றிவே‌ப்‌பிலை, மல்லித்தழை - ‌சி‌றிது
பெருங்காயம் - ‌சி‌றிது
கடுகு, எ‌ண்ணெ‌ய், உ‌ப்பு - தேவை‌க்கு

செய்முறை :

அரிசி, க பருப்பு, து பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊற வையுங்கள்.

உ பருப்பையும் பா பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜவ்வரிசியை தனியே ஊறவையுங்கள்.

ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள்.

பிறகு, ஊறிய பருப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள்.

அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள்.

கடுகைப் பொரித்து அதில் சேருங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். நன்கு வேகவிட்டு எடுங்கள். தவலை வடை தயா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil