Article Vegetarian Recipes %e0%ae%a4%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d %e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf 110020200094_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயிர் இட்லி

Advertiesment
தயிர் இட்லி
, செவ்வாய், 2 பிப்ரவரி 2010 (17:33 IST)
தேவையானவை:

இட்லி மாவு - 2 கப்
புளிக்காத புது தயிர் - 3 தே‌க்கர‌ண்டி
ஓமப்பொடி - 3 தே‌க்கர‌ண்டி
மிளகாய்த்தூள் - அரை தே‌க்கர‌ண்டி
சீரகத்தூள் - அரை தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
அரைக்க: தேங்காய் துருவல் - 3, பச்சை மிளகாய் - 4, முந்திரிப்பருப்பு - 6.
தாளிக்க: கடுகு - அரை தே‌க்கர‌ண்டி, பெருங்காயம் - அரை தே‌க்கர‌ண்டி, எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி

செய்முறை:

இ‌ட்‌லி மாவு‌க்கு எ‌ப்போது‌ம் போல அரை‌த்து பு‌‌ளி‌க்க வை‌த்த மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.

பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

இந்த இட்லிக்கு உப்பு காரம் தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil