Article Vegetarian Recipes %e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d %e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf 109072800022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்பார் பொடி

Advertiesment
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் - கால் கிலோ
தனியா - கால் கிலோ
மிளகு - 50 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
விரலி மஞ்சள் - 5

வாணலியை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகு இவைகளைத் தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிளகாயை போட்டு வறுத்துக் கொள்ளவும்.

மிக்சியில் மிளகாய், தனியாவுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கொரகொரவென்று அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

இவற்றை வீட்டில் அரைக்க முடியாதவர்கள், மிஷினில் கொடுத்தும் அரைத்து, ஆற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil