Article Vegetarian Recipes %e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d 107051900094_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொள்ளுரசம்

Advertiesment
கொள்ளுரசம்

Webdunia

தேவையான பொருட்கள

கொள்ளு - 50 கிராம

மிளகு - ¾ தேக்கரண்டி

பெருங்காயம் - 1 சிறுதுண்ட

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

தனியா - 4 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

நெய் - 1 மேஜைக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

புளி - எலுமிச்சம்பழ அளவ

உப்பு - தேவையான அளவ




செய்முற

முதலில் கொள்ளை வாணலியில் புரட்டி, பின் மிக்ஸியில் லேசாக நொறுக்கி, தண்ணீரில் வேக விட வேண்டும். மிளகாய் வற்றல், தனியா, மிளகு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்து எடுக்கவும். மிக்ஸியில் அரைத்து விழுதாக எடுத்துக் கரைத்து வைக்கவும். புளியை கரைத்து, மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்க விடவும். அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்க விடவும்.

வெந்த கொள்ளை, ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்து நீர் சேர்க்கவும். சிறிது நேரம் பொறுத்து அதன் மேலாக தெளிந்து நிற்கும் பருப்பு நீரை இறுத்து எடுத்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டி, நெய்யில் கடுகைத் தாளித்து இறக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil