என்ன தேவை?
அரிசி - 1 கப்
கேரட் துருவல் - 1 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1/4 தேக்கரண்டி
வறுத்த நிலக்கடலை - 1/4 கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் -சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
எப்படி செய்வது?
அரிசியை 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
ஒரு தாம்பாளத்தில் கொட்டி பரத்தி ஆறவிடவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
இதில் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, கேரட் துருவலை அதில் கொட்டிக் கலந்து வதக்கவும். சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.
இக்கலவையை வெந்த சாதத்தில் நன்கு கலக்கவும்.
வறுத்த நிலக்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து சாதத்தில் மேலாகத் தூவவும்.
கொத்தமல்லித் தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்.