Article Vegetarian Recipes %e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88 %e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf 110102900034_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கீரை மண்டி

Advertiesment
கீரை மண்டி
, வெள்ளி, 29 அக்டோபர் 2010 (14:12 IST)
தேவையானவ

முளைக்கீரை - 2 கட்டு
சிறிய வெங்காயம் - 8
தேங்காய்ப் பால் - முக்கால் கோப்பை
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முற

வெங்காயத்தைத் தோலுரித்து அதையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

முளைக்கீரையைத் தண்ணீரில் கழுவிச் சுத்தம் செய்து அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகையும் உளுந்தம்பருப்பையும் போட்டுத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள்.

வெங்காயம் வதங்கியதும் முளைக்கீரையைப் போடுங்கள்.

நீரை ஊற்றிக் கிளறிவிட்டு வேகவிடுங்கள்.

கீரை வெந்ததும் உப்பைப் போட்டு மீண்டுமொரு முறை கிளறிவிட்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிவிடுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil