தேவையானப் பொருட்கள் :
இட்லி மாவு - 2 கப்
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
இட்லிக்கு அரைத்த மாவுடன் உருவி நன்கு சுத்தம் செய்யப்பட்ட முருங்கைக் கீரை, பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கலக்கி அடித்துக் கொள்ளவும்.
இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லி மாவைஊற்றி வேக வைத்து எடுங்கள்.
கீரை, துளிராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
கீரை இட்லி தயார்.