Article Vegetarian Recipes %e0%ae%95%e0%ae%be%e0%ae%b0 %e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d 112041300027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார சுகியன்

Advertiesment
சமையல்
, வெள்ளி, 13 ஏப்ரல் 2012 (16:14 IST)
தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 2 கப் ( இட்லி அரிசி )
உளுத்தம்பருப்பு
சிகப்பு மிளகாய் - 8
உப்பு - ருசிக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் ( பல்பல்லாக நறுக்கியது )
நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :

1. புழுங்கலரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சிகப்பு மிளகாய், உப்பு சேர்த்து மை போல அரைத்து வைக்கவும்.

2. மறுநாள் காலை உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவைத்து நுரைக்க அரைத்து புழுங்கலரிசி மாவுடன் கலக்கவும்.

3. கடலைப் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து வடித்து சேர்க்கவும்.

4. பொடியாக அரிந்த கறிவேப்பிலை, பல் பல்லாக நறுக்கிய தேங்காய் கீற்று சேர்த்து பதமான மாவைக் கலந்து வைக்கவும்.

5. நல்லெண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி ஒரு சிறிய நெல்லிக்காயளவு புளியை அதில் போடவும்.

6. புளி நன்றாக கருகியதும் வெளியே எடுத்துவிடவும்.

7. எண்ணெயில் சிறிய போண்டாக்களாக மாவை கைகளால் கிள்ளி எடுத்துப் போடவும்.

8. பொன்னிறமாகப் பொரித்து சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil