Article Vegetarian Recipes %e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88 %e0%ae%85%e0%ae%9f%e0%af%88 108112900012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலவை அடை

Advertiesment
பருப்பு காய்கறி ரவை அடை
மழை‌ககால‌த்‌தி‌ல் ‌வீ‌ட்டி‌லஇரு‌க்கு‌மகுழ‌ந்தைகளு‌க்கஏதாவதபுது ‌விதமாமாலஉணவசெ‌ய்தகொடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா? இ‌தனசெ‌ய்தபாரு‌ங்க‌ள்.

தேவையான பொருட்கள் :

மாங்காய் - 2
ரவை - 2 ஆழாக்கு
பச்சைமிளகாய் - 6
உப்பு
எலுமிச்சம் பழம் - 1
துவரம் பருப்பு - அரை ஆழாக்கு
வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு - 1
முட்டைக் கோஸ் - 100 கிராம்
பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவ

செய்முறை :

மாங்காயை தே‌ங்கா‌ய்த் துறுவியில் துறுவிக் கொள்ளவும். பாசிப் பருப்பையும், கடலைப் பருப்பையும் 1 மணி நேரம் தண்ணீரில் ஊற க்கவும்.

அடை‌க்கு‌த் தேவையான அளவு உப்பை‌யு‌ம், பச்சை மிளகாயையு‌ம் அரைத்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

இ‌ந்த கலவையை ரவை‌யி‌ல் கொ‌ட்டவு‌ம். அ‌தி‌ல் மாங்காய் துறுவலையு‌ம் சே‌ர்‌க்கவு‌ம். எலுமிச்சம்பழ‌த்தை அ‌தி‌ல் ‌பி‌ழியவு‌ம். எ‌ல்லாவ‌ற்றையு‌ம் ந‌ன்கு ‌கி‌ள‌றி வை‌க்கவு‌ம்.

துவரம் பருப்பை குழைய வேக வைத்து அதிகப்படி தண்ணீரை வடித்து விட்டு மசிக்கவும்.

காய்கறிகளை பொடியாக நறுக்கி எண்ணெயில் நன்றாக வதக்கி பருப்புடன் கலந்து கொள்ளவும்.

இதோடு ‌‌கிள‌றி வைத்த ரவையையும், ஊற வைத்த கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் கலந்து பதமான மாவாக பிசையவும்.

webdunia photoWD
ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கைகளால் மாவை எடுத்து அடை போல தட்டி சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.


Share this Story:

Follow Webdunia tamil