அவல் பாயாசம் வைத்திருப்பீர்கள், அவல் உப்புமாவும் எளிதுதான். செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
தாளிக்க - எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு
உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
அவலை தண்ணீரில் போட்டு அலசி தண்ணீரை வடிகட்டு அவலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து அதில் உப்பு, தேவைப்பட்டால் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் சுண்டியதும் கழுவிய அவலை போட்டு கிளறி கொத்துமல்லி தூவி இறக்கவும்.