அரிசி இட்லியை மாற்றி புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு அவல் இட்லி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
புழுங்கலரிசி - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
கெட்டி அவல் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
செய்முறை:
அரிசியையும் உளுந்தையும் சேர்த்தும் அவலைத் தனியாகவும் ஊறவையுங்கள்.
அரைக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, புளிக்கவையுங்கள் (6 முதல் 8 மணி நேரம்).
புளித்த மாவில் ஆப்பசோடா சேர்த்துக் கலந்து, இட்லிகளாக ஊற்றுங்கள். வித்தியாசமான டிபன் அயிட்டம் இது.