Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த கத்தரிக்காய் மசாலா செய்ய...!

Webdunia
விதையில்லாத சிறிய கத்திரிக்காய் - 15 
பழுத்த தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பட்டை - 2 துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒன்றரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
வேர்க்கடலை, எள் - தலா ஒரு தேக்கரண்டி
கொப்பரைத் தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கெட்டியான பால் - ஒன்றரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
கத்தரிக்காயின் காம்பை எடுக்காமல் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை அரைத்து  கொள்ளவும்.
 
கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, கசகசா, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, எள், கொப்பரைத்தேங்காய் துருவலை வெறும் கடாயில் போட்டு  வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு தக்காளி சாறு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும்.
 
கத்திரிக்காய் கலவையில் பாலைச் சேர்த்து வேக விடவும். உப்பு சேர்த்து, கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா கலவையை ஊற்றி நன்றாகக் கொதித்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கவும். சுவையான கத்தரிக்காய் மசாலா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments