தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பொடி செய்யவேண்டிய பொருட்கள்:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தனியா - அரை டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெந்தயம் - அரை ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் பொடிசெய்து கொள்ளவேண்டும்.
பின்னர் புளியை 15 நிமிடங்கள் ஊறவைத்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்கரைசலை சேர்க்கவேண்டும்.
பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் வரையில் நன்கு கொதித்ததும் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கி, அதில் சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பின் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து கிளறவும். சுவையான கோவில் புளியோதரை தயார்.