Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான சுவையில் மாங்காய் சாதம் செய்ய !!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:01 IST)
முதலில் 1 கப் அளவு உதிரி உதிரியாக வடித்த சாதம் நமக்குத் தேவை. சாதத்தை வடித்து ஆற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 1 மீடியம் சைஸில் இருக்கக்கூடிய மாங்காயை துருவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். முதலில் மாங்காய் சாதத்திற்கு தேவையான மசாலா பொடியை அரைக்க வேண்டும்.


பொடி செய்யவேண்டிய பொருட்கள்:

வரமிளகாய் - 10
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
மாங்காய் துருவல் - பாதி மாங்காய் (பெரியது)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்



செய்முறை:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை , மஞ்சள் தூள் , இந்த பொருட்களை எல்லாம் போட்டு சிவக்க வறுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம் வதங்கி வந்த உடன் துருவி வைத்திருக்கும் மாங்காயை இந்த எண்ணெய்யில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். மாங்காய் குழைய வதங்க வேண்டாம். அடுத்தபடியாக தேங்காய் துருவல் , சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி, வடித்த சாதத்தை கடாயில் இருக்கும் மாங்காயோடு கொட்டி ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.


இறுதியாக அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை இந்த சாதத்தோடு சேர்த்து கலந்து ஒரு நிமிடம் போல சூடுபடுத்தி அடுப்பை அணைத்துவிடுங்கள். ஒரு மூடியைப் போட்டு சாதத்தை அப்படியே ஊற விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து எடுத்துப் பரிமாறுங்கள். அத்தனை சுவையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments