Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பைனாப்பிள் கேசரி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ரவை - 1  கப்
பைனாப்பிள் - 2 கப் (துண்டுகள்)
நெய் - அரை கப்
சர்க்கரை -  2  கப்
தண்ணீர் - 3 1/2 கப்
ஏலக்காய்தூள் - சிறிது
பைனாப்பிள் எசன்ஸ் - சிறிது
முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா - தேவையக்கு

செய்முறை :
 
பைனாப்பிளை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் அதில் ரவையை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
 
அதே கடாயில் 2  மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

பின்னர் கடாயில் தண்ணீர் (3 1/2 கப்) ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அதில் பைனாப்பிள் துண்டுகள், சிறிது  கேசரி பவுடர் சேர்த்து வேக விடவும். வெந்ததும், ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
 
ரவை வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும். அடுத்து அதில் மீதமுள்ள நெய், பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு  கலக்கவும். இறுதியாக வறுத்து, உடைத்து வைத்துள்ள பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான பைனாப்பிள் கேசரி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காய்கறிகளை சமைக்காமல் உண்பாதால் கிடைக்கும் பலன்கள்..!

இளமையில் நரைமுடி பிரச்சனையா? இதோ ஒரு தீர்வு..!

ஆரோக்கியமான வாழ்விற்கு தினசரி செய்ய வேண்டிய முக்கிய விஷயஙகள்..!

உடலுக்கு புரதச்சத்து கொடுக்கும் பழங்கள் என்னென்ன?

டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு செல்போன் பார்த்தால் வரும் நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments