சுவையான சத்தான மேத்தி சப்பாத்தி செய்ய !!

Webdunia
சனி, 14 மே 2022 (16:52 IST)
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
வெந்தயக்கீரை (மேத்தி) - 1 கப்
புதினா - 1/4 கப்
மிளகாய் தூள் - 4 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்



செய்முறை:

புதினா, வெந்தயக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை (மேத்தி), புதினா இலைகளைப் போட்டு, தயிர், மிளகாய் தூள், உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து அதில் கோதுமை மாவைச் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும். இந்த மாவை சம அளவு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தியாகத் திரட்டி வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு இரு பக்கமும் சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும். சுவையான சத்தான மேத்தி சப்பாத்தி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?!.. மிஸ் பண்ணாதீங்க..

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments