Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவையான பன்னீர் பாப்கான் செய்வது எப்படி...?

Advertiesment
Paneer Popcorn
, வெள்ளி, 13 மே 2022 (16:42 IST)
தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம் காஷ்மீர்
சிவப்பு மிளகாய்த் தூள் - 1/4
கொத்தமல்லி (தனியா)  - 1/4 மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - 2 அல்லது மூன்று சிட்டிகை
உப்பு  - 2 அல்லது 3 சிட்டிகை
கடலை மாவு - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள் - 1/4 மேசைக்கரண்டி
மஞ்சள் - 2 அல்லது 3 சிட்டிகை
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
ஓட்ஸ் - 1/2 கப்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப



செய்முறை:

முதலில் ஓட்ஸை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும். அதை தனியாக வைத்துக் கொள்ளவும். ஒருவேளை ஓட்ஸ் இல்லை எனில் பிரெட் துண்டுகளை வறுத்து அரைத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக, 200 கிராம் பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காஷ்மீர் சிவப்பு மிளகாய், கசூரி மேத்தி , மிளகுத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் சேர்த்து நன்குக் கலந்துக் கொள்ளவும்.

அந்தக் கலவையில் பன்னீர் உடையாதவாறு மிகக் கவனமாகக் கலந்துக் கொள்ளவும். இந்தக் கலவையைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக, மற்றொரு பவுல் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள், பேக்கிங் சோடா மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

பின் அதில் 5 முதல் 6 மேசைக்கரண்டி தண்ணீர் கலந்து கொள்ளவும். தற்போது அந்தக் கலவையை மீண்டும் சீராகப் பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

அடுத்ததாக கலந்து வைத்திருக்கும் பன்னீர்களை இந்த பேஸ்டில் ஒவ்வொன்றாக முன்னும் பின்னுமாக முக்கி எடுத்துக் கொள்ளவும். தற்போது அந்தப் பன்னீரை அரைத்த ஓட்ஸ் பொடியில் இருபுறமும் சீராகத் திருப்பி எடுக்கவும்.

இப்படியாக ஒவ்வொரு பன்னீரையும் மசாலாவில் முக்கி ஓட்ஸில் தடவி எடுத்து கொள்ளுங்கள். அவற்றைத் தனித்தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் பொறிப்பதற்கு ஏற்ப ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்குக் காய்ந்ததும் பனீரை எண்ணெயில் பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும். சுவையான பன்னீர் பாப்கான் தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரும பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் தரும் வேப்ப எண்ணெய் !!