Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

சுவையான பிரட் பஜ்ஜி செய்ய...!!

Advertiesment
பிரட் பஜ்ஜி
தேவையான பொருள்கள்:
 
பிரட் துண்டுகள் - 4
கடலை மாவு - 1/2 கப் 
அரிசி மாவு - 1/4 கப் 
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
 
பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண  வடிவத்தில் வெட்டி கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு,  மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பிரட் துண்டுகளை கரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கி எடுத்து  கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். 
 
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா பிரட் துண்டுகளையும் இதே முறையில் போட்டு  எடுக்கவும். சுவையான பிரட் பஜ்ஜி தயார். காபி, டீயுடன் பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!!