Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிஃப்ளவர் மிளகு பொரியல் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
காலிஃப்ளவர் சிறியது - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
சோம்பு  - அரை டீஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1 சிறு துண்டு

செய்முறை: 
 
காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.
 
ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி வெங்காயம், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் காலிஃப்ளவர், தேவையான உப்பு சேர்த்து  சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைத்து மிதமான தீயில், அரை பதத்துக்கு வேகவைக்கவும்.

பிறகு மூடியைத் திறந்து அரைத்த விழுதை சேர்த்து, காய் நன்றாக  வேகும்வரை சுருளக் கிளறி இறக்குங்கள். சுவையான காலிஃப்ளவர் மிளகு பொரியல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments